திருவானைக்காவல் ஶ்ரீ ஆகாசவாசி ஶ்ரீ கண்ட தீக்ஷதர் மடம், ஶ்ரீ ஏகவீராம்பாள் மடம் (அய்யர்கள் அய்யன் மடம்)
புராணகாலம்: திருவானைக்காவல் தீக்ஷதர்கள் வரலாறு (சமஸ்கிருத புராணத்திலிருந்து கும்பகோணம் சங்கரமடம் ஆஸ்தான வித்வான் ப. பஞ்சாபகேச ஸ்வாமிகளால் தமிழ் வசனரூபமாக மொழி பெயர்க்கப்பட்டது): “ சோணாக்ஷன் என்கிற சோளராஜாவால் சிவபூஜைக்காக ஏற்பதுத்தப்பட்டிருந்த பண்டிதர்கள் காவேரியின் பிரவாகத்தில் சம்புவால் முழுகும்படிசெய்யப்பட்டவர்கள் என்று இந்த அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. ஸுதர்: "ஹே மஹரிஷிகளே சிவாச்சார்ய ஜனங்களுடைய நிலைமையை கூறுகின்றேன் கேளுங்கள்" என்று சொல்லத்தொடங்கினார். சோணாஷ்னென்கிற சோளபூபதியால் கேதாரம் காசீ காஞ்சீ முதலானவிடங்களிலிருந்து அறுபது சிவாச்சார்ய பண்டிதர்கள் அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் வேதம் ஆகமம் புராணம் முதலியவைகளால் பண்டிதர்களாயும் சிவபூஜ செய்யும் விஸயத்தில் சிறந்த ஸாமர்த்தியம் பொருந்தியவர்களாயுமிருந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சோளன் அவர்களுக்கு பசு தனம் வஸ்திரம் முதலானவைகளைக்கொடுத்து நமஸ்கரித்துப்பின்வருமாறு பிரார்த்திக்கிறான் ஹேபிராமணர்களே! நீங்கள் என் வசனத்தை அங்கீகரித்து ஸ்ரீஜம்புகேசுவரரான தேவரையும் அகி...